நிகழ்வுகள்

8.5.2018 ஞாயிறு மாலை தஞ்சையில் ஏடகம் என்ற அமைப்புசார்பில் 'சிற்பங்கள் காட்டும் அறிவியல்' என்ற தலைப்பில் திரு .தில்லை. கோ. கோவிந்தராஜன் உரையாற்றினார். விழா அமைப்பாளர் திரு. மணி.மாறன் மிகுந்த ஆர்வத்துடனும் பிரயத்தனத்துடனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது. நிகழ்ச்சி தலைவர் சிறப்புப்பேச்சாளர் ஆகியோர் களுக்கு ஏடகம் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக மரியாதை செய்தனர்.இது அலுப்பைத்தந்தாலும் இதற்கு பின்னர் ஒரு உளவியல் உள்ளது இது பற்றி தனியாக எழதுகிறேன். நிகழ்வில் செவிக்கு உணவோடு … Continue reading நிகழ்வுகள்

தோட்டத்தில் ஒரு காட்சி

  தத்தி தத்தி நடந்து வரும் தவிடா, கத்தாதே என் காதென்ன செவிடா; பூனையார் மெல்ல நடந்து வரார் புகுந்து, அணிலார்க்கு சொன்னாயோஅன்பு மிகுந்து; கொண்டையனை விரட்டாதே அவன் பாவம், அவனும் இருக்கட்டும் தோட்டத்தில் ஓர் ஓரம்; கொண்டையா உனக்கிது ஒரு நல்ல பாடம், சாத்தனை மிரட்டாதே வண்டியும் ஏறும் ஓடம்; கொண்டையன்- கொண்டைக் குருவி. தவிடன் - தவிட்டுக் குருவி. சாத்தன் - ஆனைச்சாத்தன்.

மதமும் மொழியும்

மதத்தை மொழியிலிருந்து பிரிக்கும் போக்கு கடந்த பல ஆண்டுகளாக காணப்படுகின்றது. நமது தமிழ் மொழிக்கு இது பொருந்தாது .சங்க ப்பாடல்கள் இலக்கணநூல்கள்,சில நீதிநூல்கள் தவிர மற்ற நூல்கள் அனைத்தும் சமயம் சார்ந்த இலக்கிய ங்களே. ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தவிர மற்றவை சமய இலக்கியங்களே.சிலப்பதிகாரம் கூட சமயம்களை உயர்த்தியே கூறுகிறதுஎ.கா. ஆச்சியர் குரவை. இடைக்காலத்தை எடுத்துக்கொண்டால் சமயம் சாமானிய மக்களை சேரவேண்டும் என்பதற்காக பக்தி இலக்கியங்கள் ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் எளிய இசைப்பாடல்களாக தமிழில் இயற்றப்பட்டன.மொழியும் சமயமும் ஒன்றை … Continue reading மதமும் மொழியும்

ஐ ஆறு

ஐ என்றால் அழகு. அழகிய ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் திருவையாறு. இதன் அழகை திருவையாறு ஆற்றுப்பாலத்திலிருந்து இருபுறமும் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் போது பார்த்தால் பாலத்தை ஒட்டி ராயர் பங்களா,பின் எமது பள்ளியின் ஆற்றங்கரை வகுப்பறை,படகு குழாம் ,அடுத்து புஷ்ப மண்டப படித்துறை இரட்டை கோபுரங்கள்,அதில் உள்ள குதிரை சிலைகள்,தொடர்ந்து அரசர் கல்லூரி கல்யாணி மகால்(கல்யாணமகால் அல்ல) ,அழகிய முகப்புகள்,தியாகராஜர் சமாதி படித்துறை என்று எவ்வளவு அழகு . எதிர்கரையில் செயற்கைக்கு சவால் விடும் வகையில் இயற்கை … Continue reading ஐ ஆறு

வாழை மரமும் மும்மூர்த்திகளும்

வணக்கம்..... நமது முன்னோர்கள் இயற்கை பொருட்களை கூட இறைவனோடு இணைத்தனர். வாழைரகங்களில் பிரதானமானவை மூன்று. அவை மொந்தன், பூவன், பேயன்.இவற்றில் மொந்தன்- அதாவது முகுந்தன் திருமால், பூவன் என்பது நான் முகன்,அடுத்து பேயன் சிவனைக்குறிக்கும். எங்கள் தோட்டத்தில் விளைந்த முகுந்தன் வாழைத்தாரை பார்த்ததும் நினைவிற்கு வந்தது. இவை போல் முக்கனிகளை தொடர்புபடுத்தி கூறுவார்கள். தெரிந்தவர்கள் கூறலாமே....

நட் பூ

வணக்கம் அன்பர்களே! என் இணையப் பக்கத்தில் இது எனது முதல் பதிவு…நட்புடன் தொடங்கலாம் என்பதால் இயற்கையான நட்புச் செயலை முதலில் பதிவு செய்கிறேன். பிடித்திருந்தால் தொடர்ந்து(follow) என்னை ஊக்கப்படுத்துங்கள். தஞ்சாவூர் தலைமை தபால் நிலைய வாசலில் கத்தரிநாற்றுகள் வாங்கி பத்து மாதங்கள் முன்பு தோட்டத்தில் வைத்தேன். .முதலில் சரியாக காய்க்கவில்லை. பின்னர் காய்த்த காய்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகமாக இருந்து. இந்த நிலையில் எனது மகள் ஆரஞ்சு நிறப்பூ என்று கூறி தோட்டத்தில் சில விதைகைளை தூவினாள் … Continue reading நட் பூ