மதமும் மொழியும்

மதத்தை மொழியிலிருந்து பிரிக்கும் போக்கு கடந்த பல ஆண்டுகளாக காணப்படுகின்றது. நமது தமிழ் மொழிக்கு இது பொருந்தாது .சங்க ப்பாடல்கள் இலக்கணநூல்கள்,சில நீதிநூல்கள் தவிர மற்ற நூல்கள் அனைத்தும் சமயம் சார்ந்த இலக்கிய ங்களே. ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தவிர மற்றவை சமய இலக்கியங்களே.சிலப்பதிகாரம் கூட சமயம்களை உயர்த்தியே கூறுகிறதுஎ.கா. ஆச்சியர் குரவை.

இடைக்காலத்தை எடுத்துக்கொண்டால் சமயம் சாமானிய மக்களை சேரவேண்டும் என்பதற்காக பக்தி இலக்கியங்கள் ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் எளிய இசைப்பாடல்களாக தமிழில் இயற்றப்பட்டன.மொழியும் சமயமும் ஒன்றை ஒன்று வளரத்துக்கொண்டன.பெளத்தமும் சமணமும் நாலடியார் போன்ற நீதிநூல்களைத்தந்தன.ஐரோப்பியர் வருகைக்கு பிறகு கிறிஸ்தவமும் இதில் சேர்ந்து கோண்டது.மதத்தை வளர்க்க எண்ணி ஐரோப்பிய பாதிரியார்கள் தமிழ் கற்றுக்கொண்டனர்.வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் எழுத்து சீர்திருத்தம் மற்றும் உரைநடை இலக்கியம் போன்ற வற்றை அறிமுக ப்படுத்தினர்.அச்சுக்கலை தமிழில் அறிமுகமானதும் முதலில் வெளிவந்த நூல் சமய நூலான பைபிளின் மொழி பெயர்ப்பே. நாயக்கர் மராட்டிய ர் நவாப்கள் போன்ற அயல்மொழியினர் தமிழகத்தை ஆண்டபோது நமது இலக்கியங்களை போற்றி பாதுகாத்தது திருக்கோவில்கள் திருமடாலயங்களே. இஸ்லாமியர்கள் தங்கள் பங்கிற்கு தமிழில் நூல்கள் இயற்றினர். உமறுப்புலவரின் சீறாப்புராணம் இதற்கு சான்று. மேலும் சீதக்காதி போன்ற வள்ளல்கள் தமிழ்ப்புலவர்களுக்கு புரவலர்களாயினர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரியர் திராவிடர் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டது. இது தமிழகத்தில் தமிழ் வடமொழி பிரச்சினை ஆக்கப்பட்டது. வடமொழி யிலிருந்து தமிழ் தோன்றியது என்று ஒருசாராரும் தமிழ் திராவிட மொழிக்குடும்பம் என்று ஒருசாராரும் வாதிக்கத்தொடங்கினர். இது அரசியலாக்கப்பட்டது. இதனை திராவிட இயக்கம் நன்கு பயன்படுத்திக் கொண்டது.திராவிட இயக்க முன்னோடி கவிஞரான சுந்தரம் பிள்ளை நீராரும் கடலுடுத்ந பாடலில் வடமொழியான சமஸ்கிருதம் என்றுமே பேச்சு வழக்கில் இருந்ததில்லை என்று தெரிந்தும்(சமஸ்கிருதம் பேஜ்புரி மைதிலி பாலி ஆகிய மொழிகளை செம்மைப் படுத்தி உருவாக்கபட்ட இலக்கிய மொழி) அதனோடும் தமிழை ஒப்பிட்டு இளமை பாராட்டி துவேஷக்கருத்தை வெளிப்படுத்தினார். (நல்ல வேளை தமிழ் த்தாய் வாழ்த்தில் அது இடம் பெறவில்லை.) தமிழநாட்டில் பிராமண ர்களை இழிவு படுத்த எண்ணி இந்துமத்தை இழிவுபடுத்தனர் பிராமணர்களும்தங்களை இந்துமத காவலர்களாக எண்ணி எதிர்வனையாறறினர். திரு.அண்ணாதுரை சிறந்த இலக்கிய வாதியாக இருந்தும் வேண்டுமென்றே கம்பராமாயணத்தை இழிவுபடுத்தி கம்பரசம் என்ற ரசக்குறைவான நூல் எழுதி வெளியிட்டார். இராமாயணத்தை ஆரிய திராவிட போர் என்றும் பிராமணர்களை ஆரியர்கள் வநதேறிகள் மற்ற தமிழர்கள் திராவிடர் கள் என்றும் தமிழக காங்கிரஸாரை திரு.வி.க போன்ற தமிழறிஞர் உட்பட ஆரிய அடிவருடிகள் என்றும் திட்டமிட்டுபொய் களை பரப்பி அரசியல் செய்தனர். அப்பாவிகள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு ராவணன் இரண்யன் என்ற வில்லனகளின் பெயர் வைத்து பின்னர் அவஸ்தை பட்டனர். இவற்றால் இந்துமதமும் தமிழும் ஒருங்கே பாதிக்கப்பட்டன. கம்பராமாயணம் தேவாரம் திருவாசகம் நாலாயிரம் ஆகியன கீழத்தரமாக விமர்சனம் செய்யப்பட்டன. (அது இன்றுவரை தொடர்கிறது ) மகாகவிபாரதியை பாரதிதாசன் மற்றும் இடதுசாரிகள் பொருட்டு விமர்சனம் செய்ய இயலவில்லை. ஆனால் அலட்சியம் செய்தனர் .மற்ற மதங்களை பயம் காரணமாகவும் அரசியல் காரணமாக வும் விமர்சிக்க வில்லை. அண்டை மாநிலமான கேரளத்தில் மதம் என்பது அபின் போன்றது என்ற நாத்திக கருத்து கொண்ட கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த போதும் மதமும் மொழியும் கண்போல போற்றப்படுகின்றன. இலங்கை உள்நாட்டுப் போரில் ஏராளமான கோவில்கள் இடிக்கப்பட்டன. இது அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. இது வெறும் தமிழ் இன மக்களின் துயரமாக மட்டுமே பிரதானமாக வெளிப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் ஆதரவு கிடைக்கவில்லை. மொழியிலிருந்து மதத்தை பிரித்ததால் வந்தவிளைவு இது. தமிழைப் பொருத்தவரை தமிழும் மதமும் ஒன்றுடன் ஒன்று இரண்டற கலந்துவிட்டபடியால் இனியாவது தமிழை இழிவுபடுத்துவதாக கருதி மதத்தையும் (குறிப்பாக இந்துமத்தை)மதத்தை இழிவு படுத்துவதாகக்கருதி தமிழை இழிவு படுத்த வேண்டாம்.

“தெள்ளுற்ற தமிழின் சுவைகண்டார் இங்கு அமர் சிறப்பு கண்டார்”

Leave a comment