தோட்டத்தில் ஒரு காட்சி

  தத்தி தத்தி நடந்து வரும் தவிடா, கத்தாதே என் காதென்ன செவிடா; பூனையார் மெல்ல நடந்து வரார் புகுந்து, அணிலார்க்கு சொன்னாயோஅன்பு மிகுந்து; கொண்டையனை விரட்டாதே அவன் பாவம், அவனும் இருக்கட்டும் தோட்டத்தில் ஓர் ஓரம்; கொண்டையா உனக்கிது ஒரு நல்ல பாடம், சாத்தனை மிரட்டாதே வண்டியும் ஏறும் ஓடம்; கொண்டையன்- கொண்டைக் குருவி. தவிடன் - தவிட்டுக் குருவி. சாத்தன் - ஆனைச்சாத்தன்.